கனவொன்று வரலாறாகிய நாள் 18.11.2025.மிகநீண்டகாலமாக தமிழ் மக்களால் எதிர்பார்க்கபட்ட இலங்கை தேசிய அணியில் தமிழ் வீரர்கள் விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பை உறுதியாக்கி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் முத்தரப்பு போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ள வியாஸ்காந்திற்கு எமது வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதோடு மேலும் மேலும் சிறப்படைய இறையாசி வேண்டுகின்றோம்.இவர் இந்நிலையடைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை யாழ் மாவட்ட துடுப்பாட்டசங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கின்றோம்.


