தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு – 2025
இலங்கை துடுப்பாட்டச் சங்கம் மற்றும் விளையாட்டு த்துறை அமைச்சின் அனுசரணையுடன் தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் மாவட்ட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் திரு. ஏ. எஸ். நிசாந்தன் தலைமையில் 20.08.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணம் பைகளும்(Material Bags), 15 பாடசாலை பயிற்றுனர்களுக்கு பந்துவீச்சு உதவி உபகரணங்களும் (Side Arms), யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணியினருக்கான காலணிகளும் மற்றும் அணிக்குழாமில் (Squad Practice) தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணிகளும் (Shoes), யாழ் மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுனர் அவர்களுக்கு துடுப்பாட்ட உபகரணங்கள் உள்ளடங்கிய உபகரணப்பை மற்றும் பயிற்சிக்கு தேவையான பந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் விருந்தினர்கள், யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், துடுப்பாட்டப் பயிற்றுனர்கள், பொறுப்பாசிரியர்கள், அணித்தலைவர்கள், மாணவர்கள் எனப் பல பேர் கலந்து கொண்டார்கள்.